1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
  6. திருப்பூர் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் அதிமுக வெற்றி

Admk Grabs 6 Mayor Posts | திருப்பூர் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் அதிமுக வெற்றி

திருப்பூர்
கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் நெல்லை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

திருச்சியில் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட ஜெயா 43,118 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,85,987.

திமுக சார்பில் போட்டியிட்ட விஜயாவுக்கு 52,869 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேப்போன்று நெல்லை மாநகராட்சியையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.அதிமுக வேட்பாளர் விஜயா சத்யானந்த் 24,584 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் பெற்ற மொத்த வாக்குகள் 80,265.திமுகந் சார்பில் போட்டியிட்ட அமுதா 55,681 வாக்குகள் பெற்றுள்ளார்.

மேலும் கோவை மாநகராட்சியையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட செ.ம. வேலுச்சாமி 1,01,005 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று திருப்பூர் மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

திருப்பூர் மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட விசாலாட்சி 77,669 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவருக்கு 1,36,949 வாக்குகள் கிடைத்தன.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.செல்வராஜ் 59,280 வாக்குகள் பெற்றார்.

ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சிகளை அதிமுக கைபற்றியுள்ளதால், மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் இதுவரை 6 மாநகராட்சிகள் அதிமுக வசமாகியுள்ளது.

மேலும் மீதமுள்ள 4 மாநகராட்சிகளிலும் அக்கட்சி முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.