திருச்சி இடைத்தேர்தலில் கே.என்.நேருவை வீழ்த்தினார் பரஞ்சோதி
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவை 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி வீழ்த்தினார்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்றிலேயே அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி முன்னிலை பெற்று வந்தார். தி.மு.க. வேட்பாளர் நேரு தொடர்ந்து பின்னடவை சந்தித்து வந்து கொண்டிருந்தார்.
முதல் சுற்றிலேயே ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பின் தங்கிய நேரு, படிப்பாக ஒவ்வொரு சுற்றிலும் பின்னடவை சந்தித்தார்.
14 மேஜைகளில் எண்ணப்பட்ட 18 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி 69,029 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு 54,345 வாக்குகளும் பெற்றனர்.
மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 14 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.