1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
  6. தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

Rajinikant shifted to ICU | தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக போரூ‌ர் ராம‌ச்ச‌ந்‌திரா மரு‌த்துவமனை டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆ‌ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்துக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ந‌ள்‌ளிரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு, குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13ஆ‌ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எ‌ன்று கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.