CBI conducts raids at offices of DMK-run Kalaignar TV | கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ம.பு.க சோதனை
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு கழகத்தினர் இன்று சோதனை நடத்தினர்.
நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஷாகித் பல்வாவின் ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பல்வாவின் டிபி ரியல்டி குழுமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கடன் வழங்கியிருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு கழகத்தினர் நடத்தியுள்ள இந்த சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.