1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சைமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் : கருணாநிதி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் விழுப்புரம் சைமன் கருணாநிதி
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ‌விழு‌ப்புர‌ம் மாவ‌ட்‌ட‌ம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக த‌மிழக அரசு நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சைமன் என்பவர் ஆப்கானிஸ்தானத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தா‌லிபான் தீவிரவாதிகளால் பிணையக் கைதியாகக் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியுற்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதி, சைமன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia