1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இலங்கை‌‌யி‌ல் ‌விடுதலையான தமிழக மீனவர்கள் 22 பேர் நாளை தாய‌க‌ம் ‌திரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள்
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை இலங்கை நீதி மன்றம் விடுவித்தது. அவர்கள் நாளை ஊர் திரும்புகின்றனர்.

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டத்தில் இருந்து கடந்த மாத‌ம் 21ஆம் தேதி 5 பைபர் படகுகளில் 18 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கடந்த 22ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த 22 பேரும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று அங்குள்ள நீதிமன்றத்தில் 22 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 22 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

பின்னர், 22 பேரும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 22 பேரையும் நாளை மண்டபம் கடலோர காவல்படை குழுமத்திடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கின்றனர். இந்த தகவலை தமிழ்நாடு விசைப்படகு மீனவ சங்க செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் தெரிவித்தார்.
About Writer
Webdunia