சென்னை : இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் முத்துக்குமாரின் தியாகச் செயலை அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக்காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, இது இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.