ஈழத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு சர்வ கட்சி தலைவர்கள், மாணவர்கள், திரையுலகினர் இன்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.சென்னை சாஸ்திரி பவன் முன்பு நேற்று தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் உடல் கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலர் தா.பாண்டியன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க...