சென்னை: அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், ஆரம்ப அங்கீகாரம் பெறுகின்றபோதும், தொடர் அங்கீகாரம் பெறுகின்றபோதும் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எளிமைப்படுத்துவது குறித்து வழிவகைகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.