திருமங்கலத்தில் பிரசாரம் ஓய்ந்தது: 9ஆம் தேதி வாக்குப் பதிவு
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சியினர் இன்று மாலை 5 மணியுடன் தங்களது பிரசாரத்தை முடித்துக் கொண்டனர்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க., ச.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இன்று திருமங்கலத்தில் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
தி.மு.க சார்பில் தேர்தல் பணிக்குழுத் தலைவர் மு.க.அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் ஒரே வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் வ.உ.சி. சிலை அருகில் இருந்து புறப்பட்ட இவர்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சியினர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திருமங்கலம் பிரதான சாலையிலிருந்து பிரசாரத்தை துவக்கினார். வீதிவீதியாக சென்று அவர் வாக்குகளை சேகரித்தார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா, ஒவ்வொரு கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான கட்சித் தொண்டர்கள் சென்றனர்.
மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திருமங்கலம் தொகுதியில் தங்கியுள்ள வாக்காளர் அல்லாத வெளியூர்காரர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மதுரை காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஏஜென்டுகளாக அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களையே நியமிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் நியமிக்கப்படும் ஏஜென்டுகள், வாக்குச் சாவடி ஏஜென்டுகள் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாகவே இருக்க வேண்டும். அவர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டிய பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நரேஷ் குப்தா கூறியுள்ளார்.