விஜயகாந்த் மனைவி வாகனம் மீது தாக்குதல்
திருமங்கலம் அருகே பிரசாரத்தை முடித்து திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி வாகனம் உள்பட 6 வாகனங்களை மர்ம கும்பல் அடித்து உடைத்தது.
திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து கப்பலூரில் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்பிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வாகனத்தை ஒரு கும்பல் உருட்டுக்கட்டைகளால் அடித்து நொறுக்கியது.
பிரேமலதாவுடன் இருந்த தொண்டர் படையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் கும்பலில் இருந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தே.மு.தி.க.வினரால் கும்பலை பிடிக்க முடியவில்லை.
அதற்குள் அந்த கும்பல் பிரேமலதாவின் வாகனத்துக்கு பின்னால் இருந்த மேலும் 6 வாகனங்களையும் சரமாரியாக அடித்து நொறுக்கியது. கும்பல் தாக்கியதில் தே.மு.தி.க. தொண்டர் படையை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையத்திடமும், திருமங்கலம் காவல்துறையில் புகார் செய்வோம் என்று தே.மு.தி.க. மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.