சென்னை : தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது சட்டப்படி குற்றம் என தெரிந்தே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் வைகோ, தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.