1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

திருமங்கலம் இடை‌த்தேர்தல்: 2 பேர் மனு‌த் தா‌க்க‌ல்

மனுத் தாக்கல் திருமங்கலம் இடைத்தேர்தல்
திருமங்கலம் சட்ட‌ப்பேரவை தொகுதிக்கு சுயே‌‌‌ட்சைக‌ள் 2 பேர் வேட்புமனு‌த் தாக்கல் செய்தன‌ர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. தமிழ்மாநில சிவசேனா கட்சியின் மதுரை மாவட்ட தலைவரான பரமசிவம்ராஜா (40), கோவை மக்கள் சக்தி சங்கத்தின் தலைவர் நூர்முகம்மது(45) ஆகியோ‌ர் மட்டுமே முதல் நாளில் மனுதாக்கல் செய்தனர்.

வரும் 22ஆம் தேதிவரை மனுதாக்கல் நடக்கும். 26ஆம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படு‌கிறது.