1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காவ‌‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர் தேர்வு த‌ள்‌ளிவைப்பு

காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு
டிச‌ம்ப‌ர் 14ஆ‌ம் தே‌தி நடைபெறுவதாக இரு‌ந்த காவ‌ல்துறை‌ உத‌வி ஆ‌ய்வாள‌ர் தே‌ர்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும‌ம் த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘காவல் துறையில் 209 உதவி ஆய்வாளர்களை (தொழில் நுட்பம்) தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு வரு‌ம் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வு த‌ள்‌ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படு‌ம்' என்று கூறியுள்ளார்.
About Writer
Webdunia