1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌ங்கை‌‌த் த‌மி‌ழ் அக‌திக‌ள் ‌சி‌க்க‌ல்: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

இலங்கை அகதி மத்திய அரசு தாக்கீது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தா பாண்டியன்
இல‌ங்கை அ‌க‌திகளை‌த் ‌திரு‌ம்ப‌ச் செ‌ல்ல வே‌ண்டுமென ம‌த்‌திய அரசு தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளதாக இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் தா. பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளதை‌த் த‌மிழக அரசு வனமையாக மறு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌த் த‌மிழக அரசு ‌விடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்பு:

த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அக‌திக‌ள் முகா‌‌ம்க‌ளி‌ல் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட கால‌ம் முடி‌ந்து ‌வி‌ட்டதா‌ல், இல‌ங்கை‌க்கே ‌திரு‌ம்‌பி‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌மென, ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதாக அர‌சிய‌ல் க‌ட்‌சி ஒ‌ன்‌றி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் கூ‌றியு‌ள்ளதாக அ‌க்க‌ட்‌‌சி‌யி‌ன் த‌மி‌ழ் நா‌ளித‌ழி‌ல் செ‌ய்‌தி வ‌ந்து‌ள்ளது.

த‌மிழக முகா‌ம்க‌ளி‌‌ல் த‌ங்‌கியு‌‌ள்ள இல‌ங்க‌ை‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌திரு‌ம்‌பி‌ச் செ‌ல்ல வே‌ண்டுமென எ‌ந்த அ‌றி‌வி‌ப்பு‌ம் அரசு செ‌ய்யாத ‌நிலை‌யி‌ல், அவ‌ர் அ‌ப்படி‌க் கூ‌றி‌யிரு‌ப்பது தவறான செ‌ய்‌தி ம‌ட்டும‌ல்ல, அக‌திக‌ள் முகா‌ம்க‌ளி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌ம் இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் ‌பீ‌தியையு‌ம், கல‌க்க‌த்தையு‌ம் ஏ‌ற்படு‌த்த‌க் கூடியது.

த‌மிழக‌த்‌தி‌‌ல் 115 முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்‌கியு‌ள்ள இல‌ங்கை‌த் த‌மிழ‌‌ர்க‌ள், த‌மிழக அரசு ம‌ற்று‌ம் ம‌‌த்‌திய அரசு வழ‌ங்‌கி வரு‌ம், அனை‌த்து வகையான உத‌விகளையு‌ம் பெ‌ற்று அமை‌தியாக வா‌ழ்‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். எனவே அ‌ந்த‌ச் செ‌ய்‌தியை த‌மிழக அரசு வ‌ன்மையாக மறு‌க்‌கிறது.

இ‌வ்வாறு அ‌ந்த‌ச் செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.