இலங்கையில் போர் நிறுத்தம் கோரி 25ஆம் தேதி மறியல்: பழ.நெடுமாறன்!
Publish: Mon, 24 Nov 2008 (10:22 IST)
Updated: Mon, 24 Nov 2008 (10:22 IST)
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று கோரி நவம்பர் 25ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தவேண்டும் என்று கோரி வரும் 25ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தென் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 35 மையங்களில் இந்த மறியல் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியை சேர்ந்த ஒரு லட்சம் தொண்டர்கள் இதில் பங்கேற்கிறார்கள் என்று கூறிய பழ.நெடுமாறன், அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் இந்த மறியல் நடக்கும் என்றார்.இந்த போராட்டத்திற்கு பிறகும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றால், அனைத்துக்கட்சியினர் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார் பழ.நெடுமாறன்.