1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

முரசொலி மாறன் நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி!

முரசொலி மாறன் சென்னை முகஸ்டாலின் கஅன்பழகன் முதல்வர் கருணாநிதி
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது.

சென்னை முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறனின் சிலைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக, மத்திய அமைச்சர்கள் இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த முரசொலி மாறன், எழுத்தாளர், பத்திரிகையாளர், கதாசிரியர் உட்பட பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

அவரது 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி, ஈரோடு, திருவள்ளூர், கோவில்பட்டி, நாகர்கோவில் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
About Writer
Webdunia