கரும்புக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை!
கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கொடிமுடியில் விவசாய கருத்தரங்கில் பேசிய அவர், மத்திய அமைச்சரவையில் தமிழகத்ததை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால் தமிழகத்தின் தேவைகள் வெகுவேகமாக நிறைவேறி வருவதாகக் கூறினார்.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முதல்வரிடம் இதுகுறித்து பேசி அதனை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
படித்தவர்கள் விவசாயத்திற்கு வந்து, நவீன கருவிகளை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெற முயற்சி செய்யலாம் என்றும் அவர் கூறினார்.