1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இளங்கோவன் வலியுறுத்தல்!

வேலுச்சாமி, ஈரோடு.

தீவிரவாதம் முற்றுப்புள்ளி காங்கிரஸ் ஆட்சி பொருளாதாரம்
நாட்டில் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்க தேர்தலில் ஒபாமா வெற்றிபெற்றதன் மூலம் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் நாடுமுழுவதும் தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கூறினார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.