இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி சுமார் 89 லட்சம் ரூபாயை எட்டியிருக்கிறது.இலங்கையில் அந்நாட்டு இராணுவத்தினரால் தாக்குதலுக்கு ஆளாகி, உண்ண உணவின்றி, தங்க உறைவிடமின்றி பரிதவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களைத் திரட்டி, அந்நாட்டிற்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.மத்திய அரசின் பங்காக 800 டன் உண்வுப் பொருட்களை அனுப்பி வைக்கும் என்று சென்னையில் கடந்த ஞாயிறன்று முதல் அமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த...