1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ச‌ட்ட‌ம் த‌ன் கடமையை‌ச் செ‌ய்யு‌ம்: கருணா‌நி‌தி!

கருணாநிதி
 வைகோ விடுதலைப்புலிகள்
ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு கரு‌த்து தெ‌ரி‌வி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ''சட்டம் தன் கடமையைச் செய்யும்'' என்றா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை ச‌ந்‌தி‌த்து, வைகோ பெயரளவுக்கு கைது செய்யப்பட்டாரா? அல்லது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பின‌ர்.

இ‌த‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர், சட்டம் தனது கடமையை செய்துள்ளது எ‌ன்றா‌ர்.

விடுதலைப்புலிகள் தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு, அதைப் பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எ‌ன்று முதலமைச்சர் பதில் அ‌ளி‌த்தா‌ர்.
About Writer
Webdunia