தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் 9 செ.மீ மழை பெய்துள்ளது.அடுத்ததாக தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காவல்துறை தலைமை அலுவலகம், திருச்சி மாவட்டம் புல்லம்பாடி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.சென்னை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் 6 செ.மீ மழையும், தஞ்சாவூர்...