1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்!

டாஸ்மாக் ஊழியர்கள் போனஸ் கருணாநிதி
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

8.33 ‌விழு‌க்காடு போனஸ் மற்றும் 11.76 கருணைத் தொகை ஆக மொத்தம் 20 ‌விழு‌க்காடு வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்த, தற்காலிக பணியாளர்கள் மற்றும் சி, டி பிரிவை சேர்ந்த மொத்தம் 30,000 ஊழியர்கள் பயனபெறுவார்கள். அவர்களுக்கு ரூ.17 கோடியே 78 லட்சம் வழங்கப்படும்.
About Writer
Webdunia