சென்னை : இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகள் அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டு கோளை ஏற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தந்திகள் அனுப்பி வருகின்றனர்.