அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று சில பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருவண்ணாமலை மாவட்டம் கொரட்டூர், போளூர், தர்மபுரி மாவட்டம்...