தமிழகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்!
புனித பண்டிகையான ரம்ஜானை இஸ்லாமியர்கள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
சென்னையில் தீவுத் திடலில் நடந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள பள்ளிவாசலில் இன்று அதிகாலையில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மதிச்சியம் காந்திநகரில் உள்ள மசூதியில் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்.
ரம்ஜானையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தனர்.