1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் தகனம் நட‌ந்தது!

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் தகனம்
பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் உட‌ல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்ப‌ட்டது.

உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த குன்னக்குடி வைத்தியநாதன் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.

பின்னர், அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அ.இ.அ.ி.ு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உ‌ள்பட ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் அஞ்சலி செலுத்தினார்.

குன்னக்குடி வைத்தியநாதனின் மகன் ஸ்ரீதர், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக உள்ளார். அவர் நேற்று இரவு சென்னை வந்தார். இதையடுத்து, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று காலை இறுதி சடங்குகள் நட‌ந்தது.
About Writer
Webdunia