1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மதுரையில் ஒரு கிலோ வெடிபொருள் பறிமுதல்!

மதுரை வெடிகுண்டு காவ‌ல்துறை கே.பி.ஜெயின்
மதுரை பாண்டிகோவில் பைபாஸ் சாலை அருகஒரகிலோ எடையுள்ள வெடிகுண்டு பொருட்களை நெல்லை மாநககாவ‌ல்துறை‌யின‌ரகைப்பற்றியுள்ளதாதமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ரகே.பி.ஜெயின் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில், கட‌ந்த 27ஆ‌ம் தேதி நெல்லை மாநகரில் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்கின் புலன் விசாரணையின் அடிப்படையில், நெல்லை மாநகரை சேர்ந்த ஹீரா என்ற சையத் காசிம் என்ற ஷேக் காசிம் என்பவரை நெல்லை மாநகர காவ‌ல்துறை‌யின‌ர் சென்னையில் கைது செய்தனர்.

இ‌ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் கபூர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் மதுரை பாண்டிகோவில் பைபாஸ் சாலை அருகே சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு பொருட்களை நெல்லை மாநகர காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இ‌ந்த வழக்கின் சதித்திட்டத்தில் தொடர்புள்ளவர்கள் குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது எ‌ன்று அ‌ந்த அ‌‌றி‌க்கை‌யி‌ல் தமிழக காவ‌லதுறை தலைமை இய‌க்குன‌ரகே.பி.ஜெயின் கூறியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia