காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு!
காரைக்குடியில் இன்று யாரோ மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மார்பளவு கொண்ட எம்.ஜி.ஆர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை எம்.ஜி.ஆர் சிலையின் தலை பகுதி உடைந்து கீழே விழுந்து கிடந்தது. இது பற்றி தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது.
உடனடியாக அந்த பகுதிக்கு திரண்டு வந்த ஏராளமான அ.இ.அ.தி.மு.க.வினர், சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், சிலையை சேதப்படுத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தன் பேரில் அ.இ.அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.
மேலும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.