சென்னை: தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்க கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.