1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

முதல்வர் கருணாநிதி டெல்லி பயணம் ரத்து!

கருணாநிதி டெல்லி கம்யூனிஸ்ட் கட்சிகள்
முதல்வர் கருணாநிதி தனது டெல்லி பயணத்தை தள்ளி வைத்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த டெல்லி செல்லப் போவதாக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஜூலை முதல் வாரத்தில் அவர் டெல்லி செல்வார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் ‌வில‌க்‌கி கொ‌ண்டது. இதனால், டெல்லி செல்லும் அவசியம் தற்போது இல்லை என்று கருணாநிதி கூறினார். எனினும், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி செல்லும் திட்டத்தை அவர் தள்ளி வைத்து விட்டார். அந்த விழாவில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கலந்து கொள்கிறார்கள்.