சென்னை: விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர 15 நாட்களுக்குள் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசை அகற்ற நாடுதழுவிய போராட்டம் நடத்தப் போவதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.