1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தமிழக பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்குவது நிறுத்தம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

தமிழக பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்குவது நிறுத்தம்
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே இயக்கப்படுகிறது.

ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாம்ராஜ்நகர், மைசூரு, கொள்கேகால் ஆகியபகுதிகளுக்கு மட்டும் நேற்று மதியத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இதேபோல் மேட்டூர் பகுதியில் இருந்து செல்லும் தமிழக பேருந்துகள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மதேஸ்வரன் மலை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
About Writer
Webdunia