ஈரோடு அருகே பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறக்கப்பட்டது.ஈரோடு அடுத்துள்ளது அந்தியூர். இதன் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. அந்தியூர், கெட்டிசமுத்திரம், சந்திபாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.வட்டக்காடு, சங்கராபாளையம், புதுப்பாளையம், செல்லம்பாளையம், புதுக்காடு, ஊஞ்காடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகின்றன.இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்பகுதியில் பெய்த மழையால் மூன்று...