பா.ம.க வரைவு பட்ஜெட்டை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் பங்கீட்டுத்தொகை 15 விழுக்காடாக உயர்த்தப்படும். மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட அரசியல் நிர்ணய சபை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு திட்டத்துக்கான நிதியில் 30 விழுக்காடு வேளாண்மை துறைக்கு ஒதுக்க வேண்டும்.தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பரூக்கி விசாரணை குழுவினர் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். அதிக...