1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தமிழக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி: டி.ஆர்.பாலு

தமிழக தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.பாலு புதுப்பட்டி- திருமங்கலம் தென்காசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழதேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் சிறிய பாலங்களை சீரமைக்கவும் ரூ.5.3 கோடியை மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலஅனுமதி அளித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் புதுப்பட்டி- திருமங்கலம் சாலைக்கு இடையேயான பகுதியை வலுப்படுத்தும் பணிக்கு ரூ.2.7 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களை இணைக்கும் இந்த முக்கிய தேசிய நெடுஞ்சாலை தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல முக்கிய நகரங்கள் வழியாக அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் ஐந்து சிறிய பாலங்களை சீரமைப்பதற்காக ரூ.2.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அளவுகோலுக்கு ஏற்ப இந்த பாலங்களை சீரமைக்க அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி அளித்துள்ளார்.
About Writer
Webdunia