1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கிரு‌ஷ்ணசா‌மி ‌‌மீது தா‌க்குத‌ல்: 3 பே‌ர் ‌கைது!

கிரு‌ஷ்ணசா‌மி ‌‌மீது தா‌க்குத‌ல்: 3 பே‌ர் ‌கைது
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர்.

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி முதுகுளத்தூரில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள கா‌ரி‌ல் செ‌ன்றபோது மர்ம கும்பல் தா‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இ‌தி‌ல் அவரது வ‌யி‌ற்‌‌‌றி‌ல் ம‌ர்ம கு‌ம்ப‌லி‌ன் ஒருவ‌ன் வே‌ல் க‌த்‌தியா‌ல் கு‌த்‌தினா‌ன். படு‌காய‌ம் அடை‌ந்த அவ‌ர் மதுரை‌யி‌‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

கிருஷ்ணசாமியைத் தாக்கிய கும்பலை காவ‌ல்துறை‌யின‌ர் பல்வேறு தனிப்படைக‌ள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், லிங்குச்சாமி, ராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் காவ‌ல்துறை‌யிட‌‌ம் ‌பிடிப‌ட்டு‌ள்ளன‌ர். அவர்களை பரமக்குடி காவல் நிலையத்தில் வைத்து காவ‌ல்துறை‌யின‌‌ர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.