எனக்கு பதவி ஆசை கிடையாது என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.கடந்த 7ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்த இளைஞர் அணி ஊர்வலத்தில் நான் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என் அரசியல் வாழ்க்கையே அங்குதானே தோன்றியது. அதை நான் மறுபடியும் பிறந்த ஊராக கருதுகிறேன். அங்கே தற்போது சர்ச்சையில் இருக்கும் சேதுசமுத்திர திட்டத்தை பற்றியும், அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியும் என் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்...