1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சிறந்த ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது : கருணாநிதி அறிவிப்பு!

ஆசிரியர் தினம் டாக்டர் ராதாகிருஷ்ணன் கருணாநிதி
ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ஒவ்வொரு ஆண்டும் அறப்பணியாக ஆசிரியப் பணி புரிந்திடும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்!

செ‌ப்ட‌ம்ப‌ர் 5‌ஆ‌ம் தே‌தி ஆ‌சி‌ரிய‌ர் ‌‌தின‌ம். ஆ‌சி‌ரியராக ப‌ணி‌ தொட‌‌ங்‌கி நமது நா‌ட்டி‌ன் குடியரசு‌த் தலைவராக உய‌‌ர்‌ந்து புகழுட‌ன் ‌திக‌ழ்‌ந்த டா‌க்ட‌ர் ராதா‌கிரு‌ஷ்‌ண‌ன் ‌பிற‌ந்த ‌நா‌ள், அற‌ப்ப‌ணியாக ஆ‌சி‌ரியப் ப‌ணி பு‌ரி‌ந்‌திடு‌ம் ந‌ல்லாரை‌த் தே‌ர்வு செ‌ய்து, டா‌க்ட‌ர் ராதாக‌ிரு‌ஷ்ண‌ன் ‌விருது வழ‌ங்‌கி ‌சிற‌ப்‌பி‌த்‌திடு‌ம் ந‌ன்னா‌ள் இ‌ந்நா‌ள் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌ வா‌ழ்‌‌த்து செ‌ய்‌தி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மு‌ந்தைய ஆ‌ட்‌சி‌க் கால‌‌த்‌‌‌தி‌ல் ப‌றி‌க்க‌ப்ப‌ட்ட சலுகைகளை ‌மீ‌ண்டு‌ம் வழ‌‌‌ங்‌‌கி ஆ‌‌சி‌ரி‌ய‌ர்களு‌‌க்கு அரணாக அமை‌ந்து, அவ‌ர்களை அரவணை‌த்து செ‌ல்‌‌‌கிறது இ‌ந்‌த அரசு. ஆ‌‌சி‌‌ரிய‌ர் ப‌‌‌யி‌ற்‌சி முடி‌த்து கா‌த்‌திரு‌க்கு‌ம் இளைஞ‌ர்களு‌க்கு வேலை வா‌ய்‌ப்புகளை உருவா‌க்‌கிடு‌ம் வகை‌யி‌ல் தொட‌ர்‌ந்து பு‌திய ஆச‌ி‌ரிய‌ர்‌க‌ள் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌‌‌கிறா‌ர்க‌ள் என கருணா‌நி‌தி‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆ‌சி‌ரி‌ய‌ர் ‌தின‌ ‌விழா த‌மிழக‌ம் முழுவது‌ம் எழு‌ச்‌‌‌சியுட‌ன் ‌நிகழ ஆ‌‌சி‌ரிய‌ர் பெரும‌க்க‌ள்‌ அனைவரு‌ம் வா‌ழ்‌‌விலு‌ம் ம‌கிழ‌்‌ச்‌சி ‌நிலவ எ‌ன் உளமா‌‌ர்‌ந்த ஆ‌‌சி‌ரிய‌ர் ‌‌தின ந‌ல்வா‌ழ்‌த்து‌க்களையு‌ம், ம‌த்‌‌திய-மா‌நில ‌‌விருது பெறு‌ம் ஆ‌‌‌சி‌ரிய‌ர்களு‌க்கு மன‌ந்க‌னி‌ந்த பாரா‌‌ட்டுகளையு‌ம் தெ‌ரி‌‌வித்து‌க் கொ‌ள்‌கிறே‌ன் என முத‌ல்வ‌ர் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.