1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதலாக காவல் போடப்பட்டுள்ளது.

விமான நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பிற்கு கண்காணிப்புக் குறித்து காவல் உயர் அதிகாரிகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
About Writer
Webdunia