1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பிஎஸ்என்எல் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் குறைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா சாலையில் உள்ள தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு, சென்னை தொலைபேசி, மற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கிரீம்ஸ் ரோடு, துறைமுகம், கெல்லீஸ், அம்பத்தூர், அண்ணா நகர், கே.கே.நகர், ஆர்.கே.நகர், கோடம்பாக்கம், ஆகிய 8 இடங்களில் உள்ள தொலைபேசி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது.
About Writer
Webdunia