1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மருத்துவ கல்லூரி கலந்தாய்வு தொடங்கியது

மருத்துவ கல்லூரி
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தொடங்கியது.

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, 14 அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2,060 எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கலந்தாய்வு கூட்டத்தை நல் வாழ்வுத் துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

கலந்தாய்வு கூட்டம் வருகிற 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.