1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பிரதீபா பாட்டீல் வெற்றி உறுதி: வீரப்ப மொய்லி

பிரதீபா பாட்டீல் வெற்றி உறுதி: வீரப்ப மொய்லி
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் வெற்றி பெறுவது உறுதி என்று தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை வந்த அவர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து, மதுரை இடைத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற செய்தற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, மதுரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.
About Writer
Webdunia