1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கிரகலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்தது உண்மையே!

பிரசாந்த் கிரகலட்சுமி
நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமிக்கு முதல் திருமணம் நடந்தது உண்மை என்று சென்னை மாநகர காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

நடிகர் பிரசாந்தும் அவரது மனைவி கிரகலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஏற்கனவே கிரகலட்சுமி, நாராயணன் வேணு பிரசாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதை மறைத்து தன்னை மோசடி செய்து விட்டதாகவும் பிரசாந்த் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மேலும் கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் திருமணம் நடந்ததற்காக கூறி திருமணப் பதிவு சான்றிதழ் ஒன்றையும் பிரசாந்த் காவல் துறையினரிடம் அளித்தார். இந்நிலையில், கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணு பிரசாத்திற்கும் திருமணம் நடந்தது உண்மையென காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
About Writer
Webdunia