இந்தியன் பிரிமியர் லீகில் இணைய ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையை இறுதி நாளாக ஐ.பி.எல் நிர்வாகம் கெடு நிர்ணயித்துள்ளது.மேலும், ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெறாமலேயே ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஐ.பி.எல்-ல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று இந்திய பிரிமியர் லீக் தலைவர் லலித் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.முன்பு, சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிச் சான்றிதழை ஐ.பி.எல் கேட்டிருந்தது. தற்போது அந்த நிபந்தனையையும் ரத்து செய்துள்ளது.சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு...