1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌வீர‌ர் போலாக் திடீர் ஓய்வு!

தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஷான் போலாக் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணி
தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் 34 வயதான ஷான் போலாக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து‌ள்ளா‌ர்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணியுட‌ன் த‌ற்போது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌க‌ளி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌‌பி‌ரி‌க்கா அ‌ணி ‌விளையாடி வரு‌கிறது. இ‌ந்த ‌நி‌லை‌யி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌‌வீர‌ர் ஷா‌ன் போலாக் ‌ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டிக‌ளி‌ல் இரு‌ந்து ஓ‌‌ய்வு பெறுவதாக அ‌றி‌வி‌த்துள்ளா‌ர்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணியுட‌ன் டர்பனில் நடக்கும் டெஸ்ட் தனது கடைசி டெஸ்ட் என்றும், அதை தொடர்ந்து நடக்கும் ஒரு நாள் தொடர் தனது கடைசி ஒரு நாள் போட்டிகள் என்றும் போலாக் கூறினார். தென்ஆப்பிரிக்க அணிக்காக 12 ஆண்டுகள் விளையாட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என்றும் அவ‌ர் குறிப்பிட்டார்.

முன்னாள் அ‌ணி‌த் ‌தலைவராக போலாக் 108 டெஸ்ட் ஆடி 420 விக்கெட்டுகளும், 298 ஒரு நாள் போட்டியில் 387 விக்கெட்டுகளும் எடு‌த்து‌ள்ளா‌ர். டெஸ்டில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அவர் ஓராண்டுக்கு பிறகு டர்பன் டெஸ்டில் தான் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.