1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்து‌க்கு முனைவர் ப‌ட்‌ட‌ம்!

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்‌த் ச‌த்யபாமா ப‌ல்கலை‌க்கழக‌ம் மரு‌த்துவ‌ர் பட்டம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ச‌த்யபாமா ப‌ல்கலை‌க்கழக‌ம் சா‌ர்‌பி‌ல் கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சா‌ர்‌பி‌ல் உலக செ‌ஸ் சா‌ம்‌பிய‌ன் ‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்து‌க்கு கவுரவ முனைவர் ப‌ட்ட‌ம‌ளி‌ப்பு ‌‌விழா ப‌ல்கலை‌க்கழக வளாக‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது. ப‌‌ல்கலை. துணை வேந்தர் ஜேப்பியார், ‌வி‌‌‌ஸ்வநாத‌ன் ஆனந்துக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு இந்தியாவிலேயே முனைவர் பட்டம் வழங்கும் முதல் கல்வி நிறுவனம் நம்முடைய பல்கலைக்கழகம்தா‌ன். மத்திய அரசு ஆனந்தை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும் என்று ஜே‌ப்‌பியா‌ர் கூ‌றினா‌ர்.

விடா முயற்சி, தமது துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமே தான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம். மாணவர்கள் கல்வியில் உரிய கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்று ‌வி‌ஸ்வநாத‌ன் ஆன‌ந்‌த் கேட்டுக் கொண்டார்.