1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஆஷ‌ஸ் தொடரை ‌விட இ‌ந்‌தியா-பா‌க். போ‌‌ட்டி மு‌க்‌கியமானது: பா‌க். ப‌யி‌ற்‌சியாள‌ர் லாச‌ன்!

ஆஷ‌ஸ் தொடரை ‌விட இ‌ந்‌தியா-பா‌க். போ‌‌ட்டி மு‌க்‌கியமானது பா‌க். ப‌யி‌ற்‌சியாள‌ர் லாச‌ன்
''இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடர் ஆஷஸ் தொடரை விட முக்கியமானது'' என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் லாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகை‌யி‌‌‌ல், இங்கிலாந்து, ஆஸ்‌ட்ரேலியா இடையிலான ஆஷஸ் ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி தொடரைவிட இந்தியா- பாகிஸ்தான் மோதல் மிகவும் முக்கியமானது.

இந்த இரு அணிகளும் மோதும்போது மிகுந்த பரபரப்பான நிலை உண்டாகிறது. மேலும் ரசிகர்களும் மிகவும் உணர்ச்சிவயப்படுகின்றனர். மற்ற போட்டிகளை போல் அல்லாமல் மிகவும் தீவிரமான மோதலாக இது அமைகிறது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளேன். இரு அணிகளுமே சிறந்த நிலையில் உள்ளது. இரு அணிகளிலுமே பழைய நட்சத்திரங்கள் இருந்த இடத்தில் புதிய நட்சத்திரங்கள் உருவாகி வருகின்றனர். சுழ‌ற்பந்து வீச்சு இந்தியாவில் பலமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பலம் அதன் வேகப்பந்து வீச்சாக இருக்கிறது எ‌ன்று பா‌‌கி‌ஸ்தா‌ன் ப‌யி‌ற்‌சியாள‌ர் லாச‌ன் கூ‌றினா‌ர்.