1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

2012 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

சாகித்ய அகாடமி விருதுகள் 2012
நடப்பு ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் இவ்விருது 24 மொழிகளில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

12 கவிதை புத்தகங்கள் தவிர, 6 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு சுயசரிதை மற்றும் ஒரு திறனாய்வு நூலுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய "தோல்" என்ற நாவல், புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நாவலாசிரியர் தாயிலின் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பான "தீஸ் எரர்ஸ் ஆர் கரெக்ட்" (These errors are Correct), பிரபல வங்காள மொழி எழுத்தாளர் முகோபாத்யாயாவின் "பிரசன்" என்ற நாவலுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2010 வரை வெளியிடப்பட்ட படைப்புகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருது பெறுவோருக்கு பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும் கேடயமும் வழங்கப்படும்.