1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சிதார் இசையுலகின் பிதாமகன் ரவி சங்கர் காலமானா‌ர்

சிதார் கலைஞர் பண்டிட் ரவி சங்கர்
FILE
பிரபல சிதார் கலைஞரான பண்டிட் ரவி சங்கர் மூச்சு திணறல் காரணமாக இ‌ன்று காலமானா‌ர். அவருக்கு வயது 92.

பண்டிட் ரவி சங்கர் உடல் நலக்குறைவால் கலிபோர்னியாவிலுள்ள ஸ்க்ரிப்ஸ் நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெ‌ற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நே‌ற்று காலமானார்.

இந்திய இசையை மேற்கத்திய உலகிற்கு கொண்டு சென்ற பெருமை பண்டிட் ரவி சங்கரையே சாரும். இறுதி காலம் வரை இசை மீது நீங்காத ஆர்வம் கொண்டிருந்த ரவி சங்கருக்கு 1999 ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருதும்,மூன்று முறை கிராமி விருதும் வழங்கப்பட்டது.

பண்டிட் ரவி சங்க‌ர் மறைவு‌க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலங்களவை தலைவ‌ர் முகமது ஹமீது ஹன்சாரி பேசுகையில், ரவி சங்கர் சிறந்த இசைஞானி என்றும் அவரது இழப்பு இசை உலகில் ஒரு சமன் செய்ய இயலாத இடத்தை விட்டு சென்றிருப்பதாக கூறினார்.

மக்களவை சபாநாய‌க‌ர் மீராகுமார், இசை உலகில் பண்டிட் ரவி சங்கரின் பங்கு குறித்து விவரித்தார்.